செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கற்றாழையில் அதிசயம்: புற்றுநோய், கொழுப்பு, நீரிழிவு, வீக்கம், ஐபிஎசு, மற்றும் பிற சுகாதார நிலைமைகள் ஒரு இயற்கை மருத்துவம் ...

கற்றாழையில் அதிசயம்: 

புற்றுநோய், கொழுப்பு, நீரிழிவு, வீக்கம், ஐபிஎசு, மற்றும் பிற சுகாதார நிலைமைகள் ஒரு இயற்கை மருத்துவம் .


ஹால்ட்ஸ் புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சி.
உயர் கொழுப்பு குறைக்கிறது.
பழுது "சேறு இரத்த" மற்றும் "ஒட்டும் இரத்த" நேர்மாறானது.
உங்கள் இரத்த ஆக்சிஜனேற்றம் ஊக்கியாக.
வீக்கம் மற்றும் soothes கீல்வாதம் வலி தளர்த்தியது.
விஷத்தன்மை அழுத்தம் இருந்து உடலை பாதுகாக்கிறது.
சிறுநீரக கற்கள் தடுக்கிறது மற்றும் காபி மற்றும் தேநீர் உள்ள oxalates இருந்து உடலை பாதுகாக்கிறது.
அதிக அமில உணவு பழக்கம் சமப்படுத்த உதவி, உடல் Alkalizes.
குணப்படுத்தல்களாக புண்கள், ஐபிஎசு, கிரோன் நோய் மற்றும் மற்ற செரிமான கோளாறுகள்.
வெறும் அறிகுறிகள், காரணம் அல்ல சிகிச்சை மூலம், உயர் இரத்த அழுத்தம் இயற்கை குறைக்கிறது.
தாதுக்கள், வைட்டமின்கள், நொதிகள் மற்றும் glyconutrients கொண்டு உடல் ஊட்டம்.
உடல் தீக்காயங்கள் மற்றும் கதிர்வீச்சு தீக்காயங்கள் இருந்து குணப்படுத்துவதற்கான துரிதப்படுத்துகிறது.
, முதல் உதவி பொருட்கள் டஜன் கணக்கான மாற்றப்பட்டார் துணிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஸ்ப்ரே வழக்கற்று செய்கிறது.
ஹால்ட்ஸ் பெருங்குடல் புற்றுநோய், குடல் ஆற்றுகிறது மற்றும் செரிமான உராய்வை.
மலச்சிக்கல் முடிவடைகிறது.
இரத்த சர்க்கரை உறுதியாக்கும் மற்றும் நீரிழிவு நோய் ட்ரைகிளிசரைடுகள் குறைக்கிறது.
தடுக்கிறது மற்றும் கேண்டிடா தொற்று நடத்துகிறது.
நோய் இருந்து சிறுநீரகங்கள் பாதுகாக்கிறது.
எலக்ட்ரோலைட் சமநிலையை இயல்புநிலையையும் சொந்த "விளையாட்டு பானம்" என பணிகள், பொது விளையாட்டு பானங்கள் புறக்கணிக்கும்.
இருதய செயல்பாடு மற்றும் உடல் வலிமை ஊக்கியாக.
காயம் அல்லது உடல் உழைப்பு இருந்து வேகங்கள் மீட்பு.
நீரேறி தோல், தோல் பழுது துரிதப்படுத்துகிறது.


======================================================
In English:

Must Share

• Halts the growth of cancer tumors.
• Lowers high cholesterol.
• Repairs "sludge blood" and reverses "sticky blood".
• Boosts the oxygenation of your blood.
• Eases inflammation and soothes arthritis pain.
• Protects the body from oxidative stress.
• Prevents kidney stones and protects the body from oxalates in coffee and tea.
• Alkalizes the body, helping to balance overly acidic dietary habits.
• Cures ulcers, IBS, Crohn's disease and other digestive disorders.
• Reduces high blood pressure natural, by treating the cause, not just the symptoms.
• Nourishes the body with minerals, vitamins, enzymes and glyconutrients.
• Accelerates healing from physical burns and radiation burns.
• Replaces dozens of first aid products, makes bandages and antibacterial sprays obsolete.
• Halts colon cancer, heals the intestines and lubricates the digestive tract.
• Ends constipation.
• Stabilizes blood sugar and reduces triglycerides in diabetics.
• Prevents and treats candida infections.
• Protects the kidneys from disease.
• Functions as nature's own "sports drink" for electrolyte balance, making common sports drinks obsolete.
• Boosts cardiovascular performance and physical endurance.
• Speeds recovery from injury or physical exertion.
• Hydrates the skin, accelerates skin repair.

Please share with your friends.


திங்கள், 29 ஏப்ரல், 2013

தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்

தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்
======================================


உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு: பண்டை...ய எகிப்திலும், பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.

நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.

காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது.

இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.

சனி, 27 ஏப்ரல், 2013

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!





 
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!
=============================================

 

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு

விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

... பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.
 


சர்க்கரை குறைப்பாடு உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?



தேன்:
======
 


தேன்... கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்பு. வெள்ளைச் சீனியைத் தொலைக்க விரும்புவோரின் முதல் தேர்வு. தேனும் இனிப்புதானே என்போருக்கு ஒரு செய்தி. இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக் கூறுகள்கொண்ட அமிழ்தம் அது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தனிச் சிறப்பு. சாதாரணமாக வெள்ளைச் சீனி, புண்ணை அதிகரிக் கும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக தீப்புண்ணுக்கு நல்ல தேன் முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. புற்று நோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஒவ்வொரு சீஸனில் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் சமயம், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம் என்கிறது சித்த மருத்துவ மலை வாகட நூல்கள். நியூஸிலாந்தில் உள்ள மனுக்கா தேன், உலகப் பிரசித்தியான தேன். 100 கிராம் 3,000 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படும் இந்தத் தேன் எங்கள் நாட்டின் அமிழ்தம் என்கிறது அந்த அரசு.

எல்லாம் சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது?

ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி அதாவது 10 கிராம் தேன் எடுத்துக்கொள்ளலாம். தனியாகவும் சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லியோடோ, இஞ்சியோடோ இணைத்தும் சாப்பிடலாம். ஆனால், தண்ணீரில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல்பூர்வமானவை அல்ல. ஒரு விஷயம் முக்கியம். அதிக வெப்ப நிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைக்கும். மற்றபடி, தேன் அற்புதம்!

'சரி, எனக்கு சர்க்கரை வியாதி... நான் தேன் சாப்பிடலாமா?’ என்று கேட்பீர்கள் என்றால், வேண்டாம். கிளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பினும், அதன் இனிப்பு அளவான கிளைசமிக் லோட் சில வகை தேனில் அதிகம் என்பதால், தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே, சர்க்கரை நோய்க்காரர்களுக்கு ஒரு செய்தி. தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ... எதுவாக இருந்தாலும் சரி... சர்க்கரை வியாதி வந்தால், கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இனிப்பு என்றாலே, தேனும் பனை வெல்லமும்தான் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சின்ன வயதில் இருந்தே சொல்லி வளருங் கள்!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.



 


புதன், 24 ஏப்ரல், 2013

சுண்டைக்காய்

சுண்டைக்காய்:
==============


நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்/ கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்:

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக...்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
 
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.

.

திங்கள், 22 ஏப்ரல், 2013

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள்:
===============================

மாம்பழம்:-

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்:-

 சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர...்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
 
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வெங்காயம் - Onion


வெங்காயம் - Onion
==================

வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். இன்றும் கப்ஸாவோடு வெங்காயம் இருக்கத் தவறுவதில்லை. நேபாளத்தில் வெங்காயம் கடவுளுக்கு நிவேதனம் செய்யவ...தாகச் சொல்கிறார்கள். யூதர்கள் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். அல்குர்ஆனில் (2:261) வெங்காயமும் சொல்லப்பட்டுள்ளது. மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின் பயனைப் பற்றிக் கூறியுள்ளார். அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் 'அலைல் புரோப்பைல் டைசல்பைடு' (Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத் தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது. நரை, தலை வழுக்கையைத் தடுக்கும். உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களை குணமாக்குகிறது.

இனி... வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை
நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.

கருமையான முடியை பெற ஆசையா?

இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?
==========================================================
 
இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியன...ால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது. சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம். சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.
1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.
2)கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.
3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.
4)வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.
5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.
6)ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.
7)அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.
8)கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.
9)எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.
10)முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.

வெந்தயம்/வெண்தயம் ( Fenugreek )

வெந்தயம்/வெண்தயம் ( Fenugreek )
================================

வெந்தயம்/வெண்தயம் ( Fenugreek ) - ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
௧)பாலூட்டும் தாய்மாரின் பாற்சுரப்பைக் அதிகரிக்கும்
௨)காலையில் சிறிதளவு வெந்தயமும்... தண்ணீரும் குடித்துவந்தால் பல குடல் தொடர்பான நோய்கள் அணுகாது

௩)கரண்டி [ 100 கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன்னிறத்தில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து , பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

௪)கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு ,[50 கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு போத்தலில் போட்டு வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.

௫)வயிறு உப்புசமாகவோ ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [ ௪] வகை பொடியை 1 கரண்டி +கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

௬)தினமும் காலையில் [ ௩] வகை பொடியை மோரிலோ , தண்ணீரிலோ கலந்து குடிக்க குருதியிலுள்ள சீனி கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில் குடிக்கணும்.

௭)பேதி போகும்போது மோரில் [ ௩] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.

௮)முட்டு வலி இருப்பவர்கள் [சீனி இல்லாதவர்கள்] 1 கரண்டி [ ௩ ] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

௯) சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி கழிப்பறை போக தோன்றும். ( சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [ ௩ வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 குவளை நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல் எடுத்து செல்லவும்.

௧௦) குருதியிலுள்ள சீனி + இரத்த அழுத்தம் குறைய , முழு வெந்தயம்- கரண்டி , பாசிபயறு- 2 கரண்டி , கோதுமை- 2 கரண்டி , இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி , மறுநாள் காலை மிளகு- 2, சிறிது கல் உப்பு , கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம் , சீனி நன்றாக குறையும் , ருசிக்கும் குறைவில்லை.

௧௧) வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சீனி உள்ளவர்களுக்கு நல்லது.

௧௨)வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி , மிளகாய்பொடி , மஞ்சள்பொடி , பெருங்காயதூள் , உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி , வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர். ( வெந்தய கீரையை சுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். அதன் பலன்களுக்கு தனி புத்தகமே போடலாம்)
எந்த வகை ஊறுகாய்க்கும் [ ௪ வகை] பொடி சேர்க்கவும்.

௧௩)குவளை இட்லி அரிசி , 1/2 குவளை வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்னிறத்தில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

௧௪)குவளை புழுங்கல் அரிசியுடன் ,1/2 குவளை உளுந்ந்து , 1/2 குவளை வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- கரண்டிவெந்தயம் ஊற வைப்பதும் நல்லது.

௧௫) தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 கரண்டிவெந்தயத்தை தண்ணியுடன் விழுங்கினால் , உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சீனி உள்ளவர்களும் சாப்பிடலாம். சீனி குறையும்.

௧௭)முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள் காலை அரைத்து , தலையில் வைத்து ஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது
 

பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு

பாசிப்பயறு
-------------------
 

பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை, மோதகம் ஆகியவை இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் கன்னிய...ாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் “பாசிப்பருப்பு பாயசம்” மிகவும் புகழ் பெற்றது.
பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் என குறிப்பிடுகின்றனர். இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும்.
தொன்றுத் தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாக பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் கூடுதலாகும். 100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.
பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும். பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
மருத்துவக் குணங்கள்:
புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.
நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து வறுத்து உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.
பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றே குறைய ஒரே குணமுள்ளவை தான்.
பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.
பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது இது அதிகம் உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.
பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம்.
எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் பச்சைப் பயறை வேக வைத்து அ‌ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம். எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.


பேரீச்சை/ Dates


பேரீச்சை
 
அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தா...ன் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.





 
 
 இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரிந்துக்கொள்ளவும்.